அரசு பள்ளி மாணவர் மலேசியா பயணம் வழியனுப்பி வைத்த ஆசிரியர்கள்          

 குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மலேசியா செல்வதால் அவரை பள்ளி ஆசிரிய பெருமக்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.;

Update: 2025-02-22 13:04 GMT
தமிழக பள்ளிகல்வித்துறை சார்பில் மாநில அளவிலான வானவில் மன்ற போட்டிகளில் கடந்தஆண்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சி பிரிவில்,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் மகத்ராஜ் , என்கிற ஆறாம் வகுப்பு பயிலும்  மாணவர் மாநில அளவில் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து  அரசு செலவில் வெளிநாட்டுசுறறுலாவிற்கு தேர்வானான்.  பள்ளிகல்வித்துறை அமைச்சர்  மாண்புமிகு அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன்  கலைத்திருவிழா போட்டிகளில்தேர்வான மாணவ மாணவியர்களுடன் மலேசியா  நாட்டிற்கு சுற்றுலா செல்கிறான்.  பள்ளி பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் இரவி  நகர்மன்றஉறுப்பினர்  செந்தில்குமார்  சாய் அறக்கட்டளை தலைவர் வேல்முருகன்,  தலைமை ஆசிரியை கெளசல்யாமணி அவர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களும் மாணவன் மகத்ராஜை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

Similar News