புளியங்குடியில் காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பலி
காட்டுப்பன்றி தாக்கி விவசாயி பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் வீரப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வாவாகான் (56) இவர் இன்று மாலையில் கிணற்றில் தண்ணீர் பாய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது காட்டுப்பன்றி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் உடலை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.