மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து திமுகவினர் பேரணி

மத்திய அரசின் பாஜக ஹிந்தி திணிப்பை கண்டித்து பொன்னேரி மீஞ்சூரில் திமுகவினர் பேரணியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.;

Update: 2025-02-22 15:22 GMT
மத்திய அரசின் பாஜக ஹிந்தி திணிப்பை கண்டித்து பொன்னேரி மீஞ்சூரில் திமுகவினர் பேரணியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பொன்னேரி பஜார் வீதியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரி தலைமையில் கட்சியினர் மத்திய பாஜக அரசு இந்து திணிப்பை கண்டித்து பேரனையாக சென்று கண்டன கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர் இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர் இதில் மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன் பொன்னேரி நகரச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று பொதுமக்கள் வியாபாரிகள் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஹிந்தி திணிப்பை கண்டித்து கெட் அவுட் மோடி என கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News