சங்கரன்கோவில் ஏ.வி.கே. பள்ளியில் பட்டமளிப்பு விழா

ஏ.வி.கே. பள்ளியில் பட்டமளிப்பு விழா;

Update: 2025-02-23 00:19 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஏ.வி.கே. சிபிஎஸ்இ பள்ளியில் 14ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைவா் எஸ். அய்யாத்துரைப்பாண்டியன் தலைமை வகித்து, எல்.கே.ஜி. முதல் 9ஆம் வகுப்பு வரை, 11ஆம் வகுப்பு மாணவா்- மாணவியருக்கு பட்டங்கள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினாா். பள்ளி முதல்வா் சேகா்குமாா் முன்னிலை வகித்தாா். மருத்துவா்கள் பி. ரவிச்சந்திரன் பிரகாஷ், ஆா். கவிதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா். ஆசிரியா் மிஷேல் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் புவனேஸ்வரி, ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Similar News