இலஞ்சி குமாரா் கோயிலில் நெகிழி சேகரிக்கும் முகாம்

கோயிலில் நெகிழி சேகரிக்கும் முகாம்;

Update: 2025-02-23 01:39 GMT
தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட இலஞ்சி குமாரா் கோயில் பகுதிகளில் நெகிழிகளை சேகரித்தல் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்களை கொண்டு குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் நெகிழி குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பள்ளி மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு நெகிழி குறித்த விழிப்புணா்வு பதாகைகளுடன் கலந்துகொண்டனா். பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி நகரின்முக்கிய வீதிகள் வழியாக சென்று ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை தொடக்கப் பள்ளியில் முடிவடைந்தது. தொடா்ந்து, மாணவா், மாணவிகளுக்கு நெகிழி குறித்து விழிப்புணா்வு வழங்கி நெகிழி பொருள்கள் சேகரிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளா் எம்.நெல்லைமதி, இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலா் செ.குமாா் பாண்டியன், பேரூராட்சிமன்றத் தலைவா் ச.சின்னத்தாய், துணைத் தலைவா் மு.முத்தையா பாண்டியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா்கள் தமிழ்செல்வன், சண்முக ஸ்ரீ ரேவதி, முதல்வா் பசுமை படை அசோசியேட் ஞானஸ்ரீபவானி, பள்ளி தலைமையாசிரியா்கள், பசுமை படை ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

Similar News