மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து திருச்சி ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்;
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே நேற்று மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகா ரம் நகர செயலாளர் மணிமாலை தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஜாமலை பகுதி இளைஞரணி செயலாளர் துரை கமலேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் கல்வி நிதி ரூ.2,150 கோடியை மத்திய அரசு உடனே தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.