திருச்சி : ஆதரவற்றவர்கள் மீட்கபட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

திருச்சி ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு;

Update: 2025-02-23 04:21 GMT
தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வர ராவ் உத்தரவின் பேரில், திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முது நிலை கோட்ட ஆணையர் அபிஷேக், உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோரது மேற்பார்வையில், திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையில் நேற்று சப்-இன்ஸ் பெக்டர் சந்தீப் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது, ஆதரவற்ற, மனநலம் குன்றிய பெண் மற் றும் முதியவர் ஒருவரை மீட்டு திருச்சி துறையூரில் உள்ள காப்பகத் தில் ஒப்படைத்தனர்.

Similar News