ஆண்டிபட்டி, பழையகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் சுவர் கட்டாமல் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு பாதிப்பு ஏற்படும் விதமாக விளையாட்டு மைதானத்தின் மத்தியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.