தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஏதாவது ஒரு ஆதார் மையம் செயல்பட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று (பிப்.23) பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள ஆதார் மையம் செயல்படும். இதனை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.