ஆண்டிபட்டி ஒன்றியம், சக்கமாபட்டியில் உள்ள நாகலாறு ஓடையின் குறுக்கே இருந்த தரை பாலத்தை அகற்றி விட்டு ஒரு கோடி செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி பல மாதங்களாக நடைபெற்று வருவதால் கதிர் நரசிங்க புரத்திலிருந்து பாலக்கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.