தமிழ் தேசிய பேரியக்கம் பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் செயலர் ஆறுமுகம் தலைமையில் எது லட்சிய அரசியல் எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு பேச்சாளராக தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன், மக்கள் உரிமை போராளி, மூத்த வழக்கறிஞர் மோகன் உள்பட பலர் பேசினார்கள். இதில் மணியரசன் கூறியதாவது: இன்றைய அரசியல் கட்சிகள் கார்பரேட்டாக மாறி விட்டது. இதனால் வாரிசு அடிப்படையில் அமைந்துள்ளது. இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது. யாருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளதோ அவர்களிடம் போய் கார்பரேட்காரர்கள் சமரசம் செய்து கொள்வார்கள். பா.ஜா.க., காங்கிரஸ் இரண்டும் ஆதிக்க கட்சிகள். இவர்கள் இன அடிப்படையில் ஹிந்தியை திணிக்கிறது. ஆங்கிலம் போதுமானது. ஆனால் மூன்றாவது மொழி ஹிந்தி வேண்டும் என்று திணிக்க கூடாது. மற்ற மொழிகளை புறக்கணிக்க சூட்சுமம் தான் இந்தி திணிப்பு. மலையாளம், தெலுங்கு, கன்னடம் படிக்கலாம் என்பது என்பதெல்லாம் வலைவீச்சு. இப்படி சொன்னாலும் மக்கள் இந்தியை தான் தேர்வு செய்வார்கள் என்று புரிந்து திணிக்கிறார்கள். நமக்கு தமிழ்தான் ஆட்சி மொழி, பயிற்று மொழி, கார்பொரேட் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை விமர்சனம் செய்தால் மட்டும் போதாது. ஆளுநர் பதவி எல்லாம் சுதந்திர நாட்டில் இருக்க கூடாது. ஆங்கிலேயர் ஆளுனரை நியமித்தது போல், டெல்லி அரசியல்வாதிகள் ஆளுனரை நியமிக்கிறார்கள். இதையெல்லாம் கைவிட ஒரு இயக்கமாக ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும். இறையாண்மை உள்ள கூட்டரசாக மாற்ற வேண்டும். இதுதான் லட்சியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சுயநலம் மிக்க அரசியலாகத்தான் இருக்கும். இதயு குறித்து மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். சுயநல அரசியல்வாதிகளால் ஜாதி சண்டை, ஜாதி சண்டை, பெண் அடிமை சண்டை ஆகியவை இருக்கும். இதனை தடுக்க லட்சிய அரசியல் வர வேண்டும். அப்போது தான் நாட்டை தூய்மை படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, நிர்வாகிகள் தங்கவேலு, அந்தோணி, ராசையா, வீரப்பன், சுந்தரம், முருகேசன், வெள்ளியங்கிரி, சேகர், பத்மநாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.