தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரொட்டி, பால், முட்டை வழங்கல

குளித்தலை நகர நிர்வாகிகள் 8 ஆவது வாரமாக வழங்கல்;

Update: 2025-02-23 10:18 GMT
  • whatsapp icon
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக வெற்றி கழகம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மக்கள் பணியில் ஈடுபட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக வாரம் தோறும் குழந்தைகளுக்கு சத்தான விலையில்லா ரொட்டி பால் மற்றும் முட்டை வழங்கும் திட்டத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தளபதியின் உத்தரவின் பெயரில் கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை நகரம் சார்பாக ஆறாவது வார்டில் தொடர்ச்சியாக எட்டாவது வாரமாக குழந்தைகளுக்கு ரொட்டி, பால் மற்றும் முட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் குளித்தலை நகரத்தைச் சேர்ந்த நகர செயலாளர் M.M.விஜய் நகர இணைச் செயலாளர் பிரபு நகர பொருளாளர் சிவா மற்றும் நகர நிர்வாகிகள் சக்தி , மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News