திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவிகள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் எம்பி பெருமிதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மிகவும் திறமை வாய்ந்த மாணவ மாணவிகள் என்று திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பெருமிதம் கொண்டார்.;
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மிகவும் திறமை வாய்ந்த மாணவ மாணவிகள் என்று திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பெருமிதம் கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வருகின்ற மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள தேர்வில் வெற்றி பெறுவதை குறித்து, மாத்தி யோசி! என்ற தலைப்பில் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? எளிதாக படிப்பது எப்படி , பொதுத் தேர்வின்போது குழப்பம் இல்லாமல் தேர்வு எழுதுவது எப்படி, கேள்வித் தாள்களை பார்த்தவுடன் பதட்டம் அடையாமல் இருப்பது எப்படி, படித்தது எளிதாக நினைவில் வைத்து கொள்வது எப்படி என்ற பல்வேறு தலைப்புகளில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில். தலைமையில் திருவள்ளூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கலந்துகொண்டு பயிற்சிப்பட்டறை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது தேர்வின் போது கல்வி சம்பந்தமாக ஏற்படும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலிடம் மாணவர்கள் காரசாரமாக, கேள்விகள் எழுப்பினார்கள் அப்பொழுது மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் கட்டாயமாக கல்வியை நேசிக்க வேண்டும் எனவும் அப்படி நேசிக்கும் விதத்தில் தேர்வு எழுதும் போது எளிய முறையில் நாம் படித்த கல்வி எளிதில் நமக்கு ஞாபகத்தில் வரும் என்றும். தொடர்ச்சியாக மாணவர்கள் நான்கு, அல்லது ஐந்து, மணி நேரம் படிக்க கூடாது என்றும். அப்படி படிக்கும்போது அதிக குழப்பத்தில் மாணவர்கள் தள்ளப்படுவதாகவும் அதுபோன்ற நிகழ்வு மாணவர்களுக்கு தேர்வுகளில் தோல்வியை சந்திக்க வைக்கும் என்றும். ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் இடைவெளி எடுக்க வேண்டும் என்றும் அதுபோன்று தொடர்ந்து இடைவெளி விட்டு படிப்போமானால் 8 மணி நேரம் கூட ஒவ்வொரு மாணவர்களாலும் தொடர்ந்து படிக்க முடியும் என்றும், அதுபோன்ற பழக்கத்தை ஒவ்வொரு மாணவ மாணவிகள் கடைபிடிக்கும் போது தேர்வுகளில் அதிக அளவில் மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற முடியும் என்று அவர் தெரிவித்தார். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அதிக அளவில் திறமை உள்ளவர்கள் என்றும் அவர்களுக்கு நல்ல முறையில் கல்வி சம்பந்தமான ஊக்கத்தை தொடர்ந்து கொடுத்தோமானால் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் ஒரு முன்மாதிரியாக விளங்குவார்கள் என்று பெருமிதம் கொண்டார். மேலும் வருகிற பொதுத்தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி அடைந்து, திருவள்ளூர் மாவட்டம் முதன்மையான மாவட்டமாக வர வேண்டுமென அவர் தெரிவித்தார். இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற கிராம காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஏஜி சிதம்பரம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், உட்பட கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்