ராணுவ வீரர் சாவில் மர்மம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

மாநில நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் விபத்து என்று வழக்கை மூடிய காவல்துறையினர் பிரத பரிசோதனை அறிக்கை வெளியாகி சில குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் கொலை செய்யப்பட்ட நீதி வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகை;

Update: 2025-02-23 14:10 GMT
திருத்தணி அருகே மாநில நெடுஞ்சாலையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் விபத்து என்று வழக்கை மூடிய காவல்துறையினர் பிரத பரிசோதனை அறிக்கை வெளியாகி சில குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர் காவல் நிலையத்தில் பரபரப்பு.... திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா முத்து கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் இவர் சில வாரங்களுக்கு முன்பு வாகனத்தில் செல்லும்போது இவரை விபத்து போல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர் இந்த வழக்கை திருவாலங்காடு போலீசார் விபத்து என்று வழக்கை மூடியுள்ளனர் சரியாக விசாரிக்காமல் இப்படி செய்ததாக உறவினர்கள் முன்னாள் ராணுவ வீரர் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டு தான் இறந்து போனார் விபத்து போல் இந்த வழக்கை ஜோடித்துள்ளனர் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர் அதன் பிறகு திருவாலங்காடு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சில நபர்களை கைது செய்தனர் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை இந்த வழக்கு சம்பந்தமாக முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று குற்றச்சாட்டை முன்வைத்து முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் வெங்கடேசன் குடும்பத்தை சார்ந்தவர்கள் அவரது உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திருவாலங்காடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதி வேண்டும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சீரிய முறையில் விசாரிக்க வேண்டும் காவல்துறையினர் சிலர் உடந்தையாக செயல்படுகிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு காவல்துறை அதிகாரிகள் இடத்தில் கடும் வாக்குவாதம் செய்ததால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த வழக்கு தொடர்பாக உண்மை குற்றவாளிகளை தொடர்ந்து விசாரணையில் கைது செய்வோம் என்று காவல்துறை அதிகாரிகள் அளித்த வாக்குறுதி அளித்து முன்னாள் ராணுவ வீரர் உறவினர்கள் கலைந்து செல்ல முற்பட்டனர் அப்போது காவல்துறை அதிகாரிகளிடத்தில் முன்னாள் ராணுவ வீரர் உறவினர்கள் கூறுவது இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் யாரையாவது காவல்துறை காப்பாற்ற நினைத்தால் மீண்டும் சாலை மறியல் மற்றும் மிகப்பெரிய அளவில் முற்றுகை போராட்டம் செய்வோம் என்று காவல்துறையை எச்சரிக்கை செய்து கலைந்து சென்றனர் முன்னாள் ராணுவ வீரர் உறவினர்கள்.

Similar News