தென் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது
தென் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது;
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தேவேந்திர் மேம்பாட்டு கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாபெரும் கபடி போட்டி; தென் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 64 அணி கபடி வீரர்கள் பங்கேற்பு; வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணம் கோப்பைகள் பரிசளிப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிழக்கு பகுதியில் தேவேந்திர் மேம்பாட்டு கழகம் மற்றும் கஞ்சநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெற்ற இந்த கபடி போட்டியில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 64 அணிகளைச் சேர்ந்த கபடி வீரர்கள் பங்கேற்றனர். இரவு பகலாக நடைபெற்ற இந்த கபடி போட்டிகளை திமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 20,000 இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000 மூன்றாவது பரிசாக ரூ 10,000 மற்றும் கோப்பைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. பரிசுகளை தட்டிச் செல்லும் ஆர்வத்தில் கபடி வீரர்கள் ஆக்ரோஷமாக களத்தில் இறங்கி எதிரணி வீரர்களை கபடி கபடி என பாடி திணறடிக்க செய்தனர். பார்வையாளர்கள் வீரர்களின் கபடி விளையாட்டை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கஞ்சநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் கபடி வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.