கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்;
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது,மேலும் 7 கோடி பேருக்கும் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது- காரியாபட்டி,மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றினை நீர் ஆதாரமாக் கொண்டு ரூ 76 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுவிழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் மாவட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றினை நீர் ஆதாரமாக் கொண்டு ரூ 76 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் கூ.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4 மாநகராட்சிகள், 13 நகராட்சிகள், 43 பேரூராட்சிகள் மற்றும் 9,940 ஊரக குடியிருப்புகளுக்கான 71 குடிநீர்த் திட்டங்கள் நாளொன்றுக்கு 759.73 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.9,011.45 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 120 இலட்சம் மக்கள் பயன்பெறுவர் என்றார். 3 மாநகராட்சிகள், 8 நகராட்சிகள் மற்றும் 6 பேரூராட்சிகளில் 17 பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ.1,777.42 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 160.19 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 14.75 இலட்சம் மக்கள் பயன்பெறுவர் என்றார். திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் நாமக்கல் சார்ந்த மாவட்டங்களைச் 15 நகராட்சிகள். 37 பேரூராட்சிகள் மற்றும் 13,565 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ 17,452.72 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 766.08 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீரை 115.09 இலட்சம் மக்களுக்கு வழங்கும் வகையில் 25 குடிநீர் திட்டங்கள் பல்வேறு நிதி ஆதாரங்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவுநீரை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்றும் பொருட்டு. தூத்துக்குடி, விருதுநகர். விழுப்புரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு. கோயம்புத்தூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சார்ந்த 3 மாநகராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளில் உள்ள 16.13 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 10 பாதாள சாக்கடைத் திட்டங்கள் ரூ. 3,608.35 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 161.50 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன என்றும் தெரிவித்தார். காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு முறையே 80 ஆயிரம் மற்றும் 1.00 இலட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு வைகை ஆற்றிலிருந்து 11 நீர் உறிஞ்சு கிணறுகளிலிருந்து குடிநீர் அனுப்பப்படவுள்ளது. அங்கிருந்து குடிநீர் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் குழாய் 13.79 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் 13.98 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் உந்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படஉள்ளது. இத்திட்டம் நிறைவுறும் போது இவ்விரு பேரூராட்சிகளிலும் உள்ள 36,200 மக்கள் பயன்பெறுவார்கள்.