புதிதாக அரசு தொழில் பயிற்சி நிலையம் கட்டிடம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்
புதிதாக அரசு தொழில் பயிற்சி நிலையம் கட்டிடம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.;
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 7 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு தொழில் பயிற்சி நிலையம் கட்டிடம் கட்டும் பணிக்கு தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக குண்டாறு நடுவிலில் ஜோகில்பட்டி - கணக்கனேந்தல் இடையே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 8 கோடியே 6 லட்சம் மதிப்பில் புதிய உயர்மட்டப்பாலம் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது நமது ஒப்பற்ற முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் பொறுப்பேற்றக்கூடிய இந்த நான்கு ஆண்டுகாலத்தில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், பல்வேறு திட்டங்கள் இன்றைக்கு சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக நமது திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு. குறுகிய காலத்தில் கட்டிடமும் கட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் இந்த தொழிற்பயிற்சி நிலையமும் நமது மாண்புமிகு முதலமைச்சர் திருச்சுழி தொகுதியல் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தை தந்துள்ளார்கள். இன்றைக்கு வேலை வாய்ப்புகள் பெருகி வரும் நிலையில் யாருக்கு அதிகமான வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை இருக்கு என்றால் ஐ டி ஐ படிப்பவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. உலகப் புகழ்பெற்றிருக்கக்கூடிய டாடா நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து அரசினர் தொழில் பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட தொழிற் பயிற்சி நிலையங்களாக மாறி உள்ளது. காலச் சூழ்நிலை மாறிவரும் பொழுது வேலை வாய்ப்புக் கூடிய தொழில் கல்விகளும் பாடப் பிரிவுகளும் நாம் கொண்டு வர வேண்டிய அவசியம் இருக்கிறது. நமது திருச்சுழி பகுதியில் அமையக்கூடிய இந்த தொழில் பயிற்சி நிலையமானது நம்முடைய பகுதிகளில் படித்து வரும் இளைஞர்களுக்கும், மாணவிகளுக்கும் மிகப்பெரிய அளவிலே அவர்கள் சுய தொழில் புரிவதற்காக, நிறுவனங்களில் வேலை செய்வதற்கோ இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் தொழில் பயிற்சி நிலையம் அமையும் போது தொழிலாளர் நலத்துறை கடந்த நவம்பர் மாதம் ஒரு அரசாணை வெளியிட்டு ஏழு கோடியே 35 லட்சம் நமது முதலமைச்சரின் ஆணையைப் பெற்று இங்கு உருவாக்கப்படுகிறது . எனக்கு தனிப்பட்ட முறையில் மனநிறைவு என்றால் 1996 ஆம் ஆண்டு எனது தந்தையார் தங்கபாண்டியன் அவர்கள் இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவுத்துறை மூலமாக நமது திருச்சுழி தொகுதியில் தொழிற் பயிற்சி நிலையம் துவக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னால் வந்த ஆட்சியில் அந்த கூட்டுறவுத் துறையின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் நமது திருச்சுழி தொகுதியில் இருந்து விலகி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மீண்டும் இயங்க முடியாத நிலை வந்தது.. எனக்கு அது மிகப் பெரிய மனக்குறைவாகவே இருந்தது. நாம் உருவாக்கிய ஒன்று காலப்போக்கில் அது மறந்து விட்டது என்று. ஆனால் அந்த குறையை போக்கக்கூடிய வகையில் அவர் கொண்டு வந்த அந்த ஐடிஐ என்பது இன்றைக்கு அரசினர் உடைய ஐ டி ஐ யாக நமது அரசினர் உடைய தொழில் பயிற்சி நிறுவனமாக இன்றைக்கு மிகச்சிறந்த அளவில் வெரும் அறிவிப்பதோடு இல்லாமல் எப்போதுமே நமது முதலமைச்சராக அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார் என்றால் அதற்கு முழு வடிவத்துடன் நிதி ஒதுக்கி, கட்டிடங்கள் கட்டி, எல்லா வசதிகளும் உருவாக்கக்கூடிய வகையிலே நிச்சயமாக செய்யக்கூடியவர். அந்த வகையிலே நம்முடைய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கும் நிதியை ஒதுக்கி தற்போது கட்டிடத்திற்கான பணிகளை துவக்கி உள்ளோம் என்று பேசினார்.