உலக நற்சிந்தனை நாள் பேரணி
மாவட்ட சாரண சாரணியர்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி;
கரூர் மாவட்டம் குளித்தலையில் சாரணியர் இயக்கம் சார்பில் உலக நற்சிந்தனை நாள் பேரணி பாரதி வித்யாலயா பள்ளியில் இன்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் முதன்மை ஆணையருமான சுகானந்தம் தொடங்கி வைத்துப் பங்கேற்றார். சாரண சாரணியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். பேரணியானது எம்.பி.எஸ் அக்ரஹாரம், கடைவீதி, பேருந்து நிலையம், மாரியம்மன் கோவில் வழியாக சென்று பாரதி வித்யாலயா பள்ளியில் நிறைவடைந்தது. இதில் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஆணையர்கள் தண்டாயுதபாணி (தாளாளர், சரஸ்வதி வித்யாலயா பள்ளி), புருசோத்தமன், பவ்யா (முதல்வர் ,பாரதி வித்யாலயா பள்ளி), நித்யா (தலைமையாசிரியர், அ.உ.நி.பள்ளி, திம்மம்பட்டி), அனிதா (தலைமையாசிரியர், அ.பெ.மே.நி.பள்ளி, குளித்தலை), துணைத்தலைவர் ரம்யா (தாளாளர்,கலைமகள் கல்வி குழுமம் ), மாவட்ட பயிற்சி ஆணையர்கள் வசந்தி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்பு ஆணையர்கள் ஜெயலட்சுமி, சிவானந்தம், சேலம் ஊரக மாவட்டச் செயலாளர் சரவணன், விருதாச்சலம் சாரணிய பயிற்சியாளர் விஜயா, உதவி ஆய்வாளர் சரவணன் கிரி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், சரவணன் மற்றும் காவலர்கள், சாரண சாரணிய ஆசிரியர்கள் மற்றும் சாரண சாரணிய மாணவர்கள் 300 பேர் கலந்துகொண்டனர்.