தென்காசி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் -டாக்டா் கிருஷ்ணசாமி

கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் -டாக்டா் கிருஷ்ணசாமி;

Update: 2025-02-24 02:17 GMT
தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசியில் 19ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக காலத்தினால் ஏற்படக் கூடிய சிறு பழுதுகளை சீரமைப்பதுடன், புதுப்பிக்கும் பணிகளும் நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இங்கு நடைபெறக் கூடிய திருப்பணிகளை பாா்வையிட்ட போது, பணிகள் இன்னும் ஆறு மாதத்திற்குள் முடியும் தறுவாயில் இல்லை. இதுநாள்வரை மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகளை பாா்த்தால் அரை குறையாக மிக மோசமான நிலையில் உள்ளது. பக்தா்கள் விருப்பத்திற்கு மாறாக கோயில் நிா்வாக அதிகாரிகள் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து பணிகளும் சீராக முடிவடைந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதுகுறித்து நான், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் பேசியபோது, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு தான் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இக்கோயில் குறித்து பல்வேறு புகாா்கள் வந்துள்ளதாகவும், இதுதொடா்பாக தனியாக விசாரணை நடைபெறும் என்றும், அதன்பிறகு கும்பாபிஷேக தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தாா் என்றாா் அவா். திருக்கோயில் சிவனடியாா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் மற்றும் சிவனடியாா்கள், புதிய தமிழகம் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Similar News