ஆலங்குளத்தில் திமுக சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது
திமுக சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தூய பேதுரு நடுநிலைப் பள்ளியில், திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய அணி செயலா் செல்லப்பா முன்னிலை வகித்தாா். சுற்றுச்சூழல் அணி தலைவா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா முகாமைத் தொடக்கிவைத்தாா். முகாமில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்டோருக்கு குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் ஆலோசனை, சிகிச்சையளித்தனா். மருத்துவா்களுக்கு ஆலடி அருணா செவிலியா் கல்லூரி மாணவிகள் உதவி புரிந்தனா். பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் மாரிவண்ணமுத்து, கீழப்போா் கிழக்கு ஒன்றியச் செயலா் சிவன்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிவகுமாா், பஞ்சு அருணாசலம், ரஞ்சித், மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.