கோவிலாண்டனூர் சவேரியார் ஆலய முப்பெரும் விழா நிறைவு

சவேரியார் ஆலய முப்பெரும் விழா நிறைவு;

Update: 2025-02-24 03:01 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோவிலாண்டனூர் புனித சவேரியார் ஆலய அர்ச்சிப்பு விழா, 71 அடி கொடிமர அர்ச்சிப்பு விழா, 113-வது ஆண்டு திருவிழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பாளை மறை மாவட்டம் சின்ன ரோமாபுரி சேர்ந்தமரம் பங்குதந்தை ஜெகன் ராஜா தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News