சங்கரன்கோவில் அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி மேலத் தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் முருகன் வயது 45 இவர் குவளைக் கன்னியில் பேட்டரி ஒர்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொட்டல்பட்டி ரோட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து முருகன் மயங்கி நிலையில் இருந்தார் மயங்கிய நிலையில் இருந்த முருகனை அங்குள்ளவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.