சுத்தமல்லியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
முதல்வர் மருந்தகம் திறப்பு விழா;
தமிழகம் முழுவதும் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 1000 முதல்வர் மருந்தகத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சுத்தமல்லி விலக்கில் நடைபெற்ற முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் சுத்தமல்லி காவல் ஆய்வாளர் சோணமுத்து பங்கேற்று மருந்தகத்தை திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா, துணைத் தலைவர் எம்ஜிஆர் சுடலைமுத்து, ஒன்றிய கவுன்சிலர் கிட்டு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.