ராமநாதபுரம் மீனவர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம்

Update: 2025-02-24 09:07 GMT
ராமநாதபுரம ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காஅனுமதி சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர் இந்த நிலையில் மன்னார் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை 5 விசைப்படகையும் அதிலிருந்து 32 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு அரசுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதோடு 5000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை செய்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Similar News