குடிபோதையில் நான்கு இளைஞர்கள் தாக்குதல் பேருந்து கண்ணாடி உடைப்பு

பல்லடத்தில் குடிபோதையில் நான்கு இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடிகள் உடைத்து அட்டூழியம்;

Update: 2025-02-24 10:05 GMT
பல்லடம் பேருந்து நிலையம் முன்பு மது போதையில் தனியார் உணவகத்தை சூறையாடிய 4 இளைஞர்கள். மதுபான கூடத்தில் ஒருவரின் மண்டை உடைப்பு மற்றும் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு. பேருந்து கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் மற்றும் வட மாநில இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிர்புறமாக அரசு மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. நேற்று  தூத்துக்குடி பகுதியை சேர்ந்த குணசேகரன், பாலமுருகன், மதன், மாரிச்செல்வம் ஆகிய 4 இளைஞர்கள் மது போதையில் அங்கு வந்த பப்புராஜ் என்ற வடமாநில இளைஞர் மற்றும் அவரது நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கை கலப்பாக மாறி தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் 4 பேரும் அந்த வடமநில இளைஞர்களை துரத்தி துரத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.  பின்னர் மது போதையில் தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்து கண்ணாடிகளை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்துள்ளார். அதன் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.  இதில் படுகாயம் அடைந்த வட மாநில இளைஞர்கள் இரண்டு பேர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை பல்லடம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த 4 இளைஞர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மது போதையில் இருந்த இளைஞர்கள் விசாரணைக்காக வந்த பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர்  சுரேஷ் காலில் விழுந்து தங்களை விட்டு விடுமாறு கதறும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Similar News