முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
வெள்ளகோவில் அருகே ஜெ.ஜெயலலிதா பிறந்த நாள் விழா;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு கவுன்சிலர் ராம்குமார் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.