மாவட்ட ஆட்சியரை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியரை கண்டித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட அனுமதி வழங்காத மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து அனைத்து கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ... விருதுநகர் மாவட்டம் முழுவதிலுமிருந்து பொதுமக்களும் , அனைத்து கட்சியினரும் சார்பாகவும் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தினுள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து கடந்த மாதம் உத்தரவு போட்ட நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி சார்பாக போராட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்