அருப்புக்கோட்டையில் முதல்வர் மருந்தகத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டையில் முதல்வர் மருந்தகத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.;

Update: 2025-02-24 14:10 GMT
அருப்புக்கோட்டையில் முதல்வர் மருந்தகத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை தெற்கு தெரு முருகன் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தககத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த மருந்தகங்களின் மூலம் ஏழை எளிய மக்கள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம். இந்த முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், அருப்புக்கோட்டை நகராட்சி சேர்மன் சுந்தரலெட்சுமி சிவப்பிரகாசம், உள்ளிட்ட ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News