தனியார் மதுபானக் கடை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியிடம் மனு ....*
தனியார் மதுபானக் கடை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியிடம் மனு ....*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் மதுபானக் கடை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியிடம் மனு .... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு பகுதியான சர்ச் தெரு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் எனவும் மேலும் இந்த பகுதியை சுற்றி தனியார் வங்கி அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன எனவும் இந்த பகுதியைச் சுற்றி ஏற்கனவே அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் இயங்கி வருவதால் அங்கு மது அருந்திவிட்டு வருபவர்களால், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளா கிவருவதாகவும் இது சம்மந்தமாக உள்ளூர் காவல் அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடம் பல தடவை மனு அளித்து உள்ளதாகவும், இதனை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிட்டு ஆய்வு செய்யாமல் மேலும் வெற்றி ரெக்ரியேஷன் கிளப் என்ற தனியார் மதுபானக்கடை அமைவதற்கு அனுமதி அளித்துள்ளதாக உம் இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்ய வேண்டும் எனவும், மேலும் தங்கள் பகுதியில் இயங்கிவரும் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வேற இடத்திற்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர் பேட்டி: 1. லிங்கம்மாள் - பகுதிவாசி : 2. கதிர்வேல் - முன்னாள் ராணுவவீரர்