புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது;
விருதுநகரில் நகர மகளிர் அணி சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் முன்னாள் முதலமைச்சர் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக விருதுநகர் ஏடிபி காம்பவுண்ட் பகுதியில் விருதுநகர் நகர மகளிர் அணி சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதான வழங்கினார். முன்னதாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட கழக அவை தலைவர் விஜயகுமரன் நகர மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.