திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்;
திருச்சி எடமலைப்பட்டி புதூா் செட்டியப்பட்டி சாலை அன்பிலாா் நகரை சோ்ந்தவா் அ. செல்வராஜ் (39). இவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று மாலை வீடுதிரும்பினா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது, பிரோவையும் உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்கு பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.