நத்தக்கடையூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்;
நத்தக்காடையூர் ஊராட்சி அ.தி.மு.க சார்பில் கடைவீதியில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் எஸ்.இளங்கோ தலைமை தாங்கினார். விழாவில் காங்கேயம், ஆலாம்பாடி ஊராட்சி, நெய்க்காரன்பாளையம் அ.தி.மு.க.கிளை செயலாளர் என்.எஸ்.என்.தனபால் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் முள்ளிப்புரம் குமாரசாமி, தங்கராஜ், பொன்னுச்சாமி, மாரியாத்தா சுரேஷ், ரத் தினபுரி சிவசாமி, ஆர்.எஸ்.கலைமணி, கேபிள் விஜயகு மார், மளிகை சுப்பிரமணி, மல்டி குமார், வெள்ளியங்கிரி, தங்கவேல், ஓடக்காடு விஜயகுமார், முள்ளிபுரம் சிவு உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.