சங்கரன்கோவிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு;

Update: 2025-02-25 01:41 GMT
தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அந்தவகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காலையில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்னர் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பையா பாண்டியன் மற்றும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சங்கரன்கோவில் நகர் மன்ற துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜீ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து மாலையில் ப பிரசித்தி பெற்றதும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி குட்டியப்பா தலைமையில் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் திரளானோர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர் பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது..

Similar News