ராமநாதபுரம் நாயை கண்டுபிடித்தவர் போலீசில் புகார்

ராமநாதபுரத்தில் ஆசையாக வளர்த்த நாயை திருடி சென்ற நபரை கண்டுபிடிக்க கோரி போலீசில் புகார்;

Update: 2025-02-25 01:54 GMT
ராமநாதபுரம் நகர் பகுதியில் செல்லமாக வளர்த்த நாயை திருடி சென்ற நபரை கண்டுபிடிக்க கோரி சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார். ராமநாதபுரம் வஉசி நகரில் வசித்து வருபவர் தர்மராஜ். இவர் அவரது வீட்டில் பத்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லேபர் டாக் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நாய் கடந்த 12ஆம் தேதி இரவு காணாமல் போன நிலையில் அவர் ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதியில் தேடி வந்தார். ஆனால் நாய் கிடைக்காததால் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது அதில் ஆசையாக வளர்த்த நாயை ஒருவர் திருடி சென்ற தெரியவந்தது இதையடுத்து அந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் தர்மராஜ் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார்அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நாயை தேடி வருகின்றனர்.

Similar News