ராமநாதபுரம் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு

மும்மொழி கொள்கையை புதிய தமிழகம் ஆதரிக்கிறதுஇந்தி படிக்க கூடாது என்று சொல்வதற்கு திமுகவிற்கு என்ன உரிமை உண்டு என ராமநாதபுரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி;

Update: 2025-02-25 01:56 GMT
ராமநாதபுரம் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில், இட ஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் ராமநாதபுரம் ரோசரி மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கட்சி பிரமுகர்களிடம் இட ஒதுக்கீடு மற்றும் மாஞ்சோலை மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை விவகாரத்தில் வரும் மூன்றாம் தேதி அரசு நீதிமன்றத்தில் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் வெளியாகும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். புலிகள் காப்பகம் அமைப்பதாக மாஞ்சோலையில் வாழ்ந்த மக்களை மக்களை திட்டமிட்டு திமுக அரசு அப்புறப்படுத்தியுள்ளது. மலையை விட்டு இறங்கும் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதாக அரசு கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் மாஞ்சோலை மக்களின் அடிப்படை வசதிகளை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்க வேண்டும் இதுவரை மாஞ்சோலை விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து போராடும் என்றார். ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவோம், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்பதை போல் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மட்டும்மே அளித்துள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர்,புதிய தமிழகம் மும்மொழிப் கொள்கையை ஆதரிக்கிறது.திமுக தொடர்ந்து இரு மொழிக் கொள்கையை நிலைப்பாட்டை மாற்றி கொள்ளாவிட்டால் மக்கள் திமுகாவை புறக்கணிப்பார்கள் மக்கள் மத்தியில் திமுகவின் பலம் ஜீரோ நிலைக்கு தள்ளப்படும். ஹிந்தி படிக்க கூடாது என்று சொல்வதற்கு திமுகவிற்கு என்ன உரிமை உள்ளது. அரசியல் சாசன சட்ட பிரிவின் படி ஜாதி, மதம், இனம் ரீதியாக பிரிவினை காட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என மக்களை வற்புறுத்தினால் திமுக அரசு மீது 356 வது பிரிவை பயன்படுத்த முடியும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆளும் திமுக கட்சியினர் முகாமிட்டு இக்கடக்கரையை கடத்தலுக்கு பயன்படுத்தும் கேந்திரமாக பயன்படுத்தி வருவதால் மத்திய அரசின் உளவு பிரிவுகளை ராமநாதபுரம் கடை கோரப் பகுதிகளில் நியமித்து கஞ்சா தங்கம் போன்ற கடத்தல் தடுதது நிறுத்த உரிய எடுக்க வேண்டும் இல்லையெனில் தமிழகத்திற்குள் தற்போது கஞ்சா போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை போல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் அதே நேரத்தில் இலங்கை கடல் வளத்தை அளிக்காமல் தமிழக மீனவர்கள் கவனத்துடன் மீன்பிடிக்க வேண்டும் என்றார்.

Similar News