ராமநாதபுரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் ஹிந்தி எதிரான போரை திமுக திணிக்கிறது ஆளும் கட்சியினர் உதவியுடன் தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திமுக தமிழக மக்களின் உயிருடன் விளையாடி வருகின்றனர டிடிவி தினகரன் பேச்சு;

Update: 2025-02-25 02:00 GMT
ராமநாதபுரம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், 1965 ஆம் ஆண்டு அண்ணா காலத்தில ஹிந்தி தினிப்பை எதிர்த்து போர் நடைபெற்றது. ஆனால் இப்போது திமுக திட்டமிட்டு ஹிந்திக்கு எதிரான போரை திணிக்கிறது. நீட் ரத்து போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியது போல ஹிந்தி மொழி திணிப்பு என மக்களை திமுக அரசு ஏமாற்ற பார்க்கிறது ஆனால் தமிழகத்தில் மக்கள் விழிப்புடன் உள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினர் உதவியுடன் போதைப்பொருள விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் பெண்கள் இரவில் தனிமையில் செல்ல முடியாத சூழ்நிலை தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழக முழுவதும் சுற்று முதல்வர் பயணம் கொண்டு வருகிறார். தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூன்றாவது மொழியாக ஹிந்தி படிக்கிற வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசிடம் பேசி நிதியைப் பெற்று வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் அதை விடுத்து திமுகாவினர் ஹிந்தியுல் எழுதி உள்ளதை அழித்து சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் 16 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் ஆனால் அவர்கள் திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுங்காமல் காவல்துறை கை கட்டப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் போலீசார் சுதந்திரமாக செயல்பட்டதால் பல ரவுடிகள் தமிழகத்தை விட்டு ஓடினார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்த தவறால் தமிழக மக்கள் திமுகவிற்கு வாய்ப்பு கொடுத்தனர் ஆனால் திமுகவினர் தமிழக மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

Similar News