உறையூர் நாச்சியார் கோவில் பரமபதவாசல் திறப்பு
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் தாயார் பரமபத வாசலில் எழுந்தருளினார்.;
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் 108 திவ்ய தேசங் களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் திவ்ய பிரபந்தங்கள் பாடப்பட்ட தல மான இக்கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக இருப்பதால் பூஜை, புனஸ்காரங்கள் அனைத்தும் அங்குள்ள நடைமு றையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மற்றும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பினை போன்று இந்த கோவிலிலும் மாசி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்கவாசல் திறப்பு நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் 23-ந்தேதி வரை நடைபெற்றது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் தாயார் வெவ்வேறு அலங்காரங்களில் சேவை சாதித்தார். அதன் தொடர்ச்சியாக ராப்பத்து எனப்படும் திருவாய் மொழி திருநாள் நேற்று தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு சர்வ அலங்காரத்தில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரம பதவாசலை கடந்து சென்றார். அப்போது அங்கு கூடி இருந்த திரளான பக்தர்களும் இரு கரம் கூப்பி தாயாரை வணங்கி வழிபட்டனர். ராப் பத்து உற்சவம் வருகிற 1-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.