அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடினர்;

Update: 2025-02-25 03:39 GMT
அரியலூர், பிப்.24- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் தாமரை எஸ்.ராஜேந்திரன் கட்சிக்கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டச் செயலர் இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், அம்மா பேரவை மாவட்டச் செயலர் சங்கர், இணைச் செயலர் பிரேம்குமார், அண்ணா தொழிற் சங்க செயலர் பாஸ்கர், நகரச் செயலர் செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் பாலு, செல்வராஜ், மகளிரணி ஜீவா அரங்கநாதன், முன்னாள் அரசு வழக்குரைஞர் எஸ்.வி.சாந்தி, வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் ராம.கோவிந்தன், சுகுமார், வெங்கடாஜலபதி,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்திலுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், அதிமுக மாவட்ட அவைத் தலைவருமான ராமஜெயலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Similar News