சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தல்

கேர்மாளம் கிராமத்தில் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து செல்லும் கிராம மக்கள்;

Update: 2025-02-25 04:51 GMT
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேர்மாளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்பொழுது இங்குள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் மின் மோட்டார் மின் பற்றாக்குறையால் இயக்க முடியாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக கேர்மாளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று அருகே உள்ள கிராமத்தில் தண்ணீர் பிடித்து வரும் அவல நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்த அப்பகுதி மக்கள் கூறும்போது,எங்கள் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் கூலி தொழிலாளிகள் தான். அந்த தினமும் கூலி வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும். இந்த சூழ்நிலையில் எங்கள் கிராமத்தில் சமீப காலமாக சீரான குடிநீர் வருவதில்லை. ஆழ்குழாய் மின்மோட்டார் மின் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் சீராக வருவதில்லை. இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் வயதானவர்கள் பல கிலோமீட்டர் கடந்து சென்று அருகே உள்ள கிராமத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் எங்கள் பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News