லைஃப் ஜாக்கெட் அவசியம்

கொடிவேரி தடுப்பணையில் பரிசல் சவாரிக்கு லைப் ஜாக்கெட் கட்டாயம்;

Update: 2025-02-25 04:54 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக கொடிவேரி தடுப்பணை உள்ளது. இன்று தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குறித்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக வரும். தடுப்பணையின் மேல் பகுதியில் பரிசல் பயணமும் நடைபெற்று வருகிறது. இதற்காக 43 பரிசல்கள் சுழற்சி முறையில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.பரிசல் பயணத்தின் போது சுற்றுலா பயணிகள் கட்டாயம் லைப் ஜாக்கெட் (பாதுகாப்பு உபகரணங்கள்) அணிய நீர்வள ஆதாரத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பிளக்ஸ் பேனரும், பரிசல் துறை அருகே கட்டப்பட்டுள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளை லைப் ஜாக்கெட் கட்டாயம் அணிய வலியுறுத்தி அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குவிந்தனர். தடுப்பணை வழியாக 20 கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறியது. இதனால் தண்ணீர் அருவியாக கொட்டாததால் பவானி ஆற்றில் குட்டையாக தேங்கிய தண்ணீரில் பலர் குறித்து சென்றனர்.

Similar News