குண்டாஸ் பாய்ந்தது

கஞ்சா விற்ற 2 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது;

Update: 2025-02-25 04:56 GMT
திருச்சி, பாண்டமங்கலம், முஸ்லிம் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (48). கவுந்தப்பாடியில் பவா கல்யாண மண்டபம், சம்பள காடு பகுதியில் வசிக்கிறார். இதே போல் கடலூர் மாவட்டம் புலியூர் வசனன்குப்பம், தெற்கு வீதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (48). இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் கோபி மதுவிலக்கு போலீசார் இருவரையும் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மூலம் கோபி மதுவிலக்கு போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனை செய்து இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அப்துல் ரகுமான், சிவப்பிரகாசம் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News