புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு, அரசுப் பள்ளிக்கு புதிய கலையரங்கம் அமைக்க பூமி பூஜை
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா மற்றும் அரசுப் பள்ளிக்கு புதிய கலையரங்கம் அமைக்க பூமி பூஜை போடும் பணி தொடக்கம்!;
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா மற்றும் அரசுப் பள்ளிக்கு புதிய கலையரங்கம் அமைக்க பூமி பூஜை போடும் பணி தொடக்கம்! செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி பேரூராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும். மேலவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி பின்னர் பள்ளி வளாகத்தில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் சங்கீதா, கவுன்சிலர் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.