பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு
ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு;
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் ஹிந்தி எழுத்துக்களை மர்ம நபர்கள் கருப்பு மையால் இன்று அளித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது. மேலும் சம்பவ இடத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.