வீட்டுமனை பட்டா கேட்டு கீழகோணம் மக்கள் மனு

நாகர்கோவில்;

Update: 2025-02-25 06:33 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிற்றாறு அருகே உள்ள வலியஏலா பகுதி கீழகோணம் என்ற இடத்தை சேர்ந்த பெண்கள், கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட், கவுன்சிலர் நளினி, சமூக ஆர்வலர் சேகர் ஆகியோருடன் வந்து மனு ஒன்றை அளித்தனர்.       அந்த மனுவில், - களியல் கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட வலயஏலா கீழகோணத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் 216 சர்வே எண் கொண்ட இடத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு குடியிருப்பவர்களுக்கு அரசு மின்சார வசதி செய்து கொடுத்துள்ளது. ஆனால் இதுவரை வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. குடியிருக்கும் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News