ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி தேர்தல் நடத்த கேட்டு;
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரி மாவட்டம் உட்பட தமிழகத்தில் சில இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராம ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் மாவட்ட கவுன்சிலர்களிடம் இருக்க வேண்டிய நிர்வாகம் தற்போது தனி அலுவலர்கள் வசம் இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தலை தள்ளிப் போடாமல் குமரி மாவட்டம் உட்பட 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அஜித் குமார், துணைத் தலைவர் நந்தகுமார் சிவா, உறுப்பினர் வினோத்குமார் மற்றும் திரளான முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.