திருச்செங்கோட்டில் தி மு க மாணவர் அணி சார்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம்
திருச்செங்கோட்டில் தி மு க மாணவர் அணி சார்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம்;
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி தர மாட்டோம் என ஆணவமாக கூறும் மத்திய அமைச்சரின் பேச்சை கண்டித்தும் திருச்செங்கோடு சூரியம் பாளையம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரிலும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலும், இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்தும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மாட்டோம் என ஆணவமாக கூறும் மத்திய அமைச்சரின் பேச்சை கண்டித்தும், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தும்,கெட் அவுட் மோடி என பதாகை பிடித்து திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முன்னதாக வட்டார நூலகத்தின் முன்பு மாணவர்கள் ஊர்வலமாக திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் வரை வந்தனர். ஆர்ப்பாட்டத்திற்குநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஐயப்பன் என்கிற பெருமாள், நாமக்கல் மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் கே.கே. கணேசன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எலச்சிபாளையம் சுரேஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் மாணவர் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடு, மாணவர்களுக்கான நிதியை வழங்கு , இந்தியை கட்டாயமாக திணிக்காதே, மும்மொழிக் கொள்கையை ரத்து செய்,கெட் அவுட் மோடி என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திமுகமாணவரணிமற்றும் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.