சுவரில் வளர்ந்துள்ள செடிகள் சிறுபாலம் சேதமாகும் அபாயம்

மஞ்சள்நீர் கால்வாய் குறுக்கிடும் இடத்தில் கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் சுவரில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன;

Update: 2025-02-25 08:39 GMT
காஞ்சிபுரம் நகரில் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில், மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில், இக்கால்வாய் துார்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில்வே சாலையில், மஞ்சள்நீர் கால்வாய் குறுக்கிடும் இடத்தில் கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் சுவரில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகள் வேர்கள் வேரூன்றி வளர்வதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், சிறுபாலம் முழுதும் வலுவிழுக்கும் அபாயம் உள்ளது. எனவே, மஞ்சள்நீர் கால்வாய் சிறுபாலத்தின் சுவரில் வளரும் அரச மரச்செடிகளை அகற்றி, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News