அரியலூரில் ஜாக்டோ } ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் ஜாக்டோ } ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-02-25 08:53 GMT
அரியலூர்,பிப்.25- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ}ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான சரண்டர் விடுப்பு, உயர்க் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக் காலமாக வரன்முறைப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பினர் ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான வேல்முருகன் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருணாநிதி, ஷேக்தாவூத், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் விக்டோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்க நிர்வாகிகள், அனைத்துத் துறை பணியாளர்கள் கலந்து கொண்ட முழக்கமிட்டனர்.

Similar News