திருவேங்கடம் அருகே விவசாய நிலத்தில் கிடந்த மனித எலும்புக்கூடு
விவசாய நிலத்தில் கிடந்த மனித எலும்புக்கூடு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் தாலுகா உட்பட்ட சத்திரம் கொண்டான் கிராமத்தை சேர்ந்த இன்னாசிராஜ் என்ற விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அறுவடை இயந்திரத்தை வைத்து மக்காச்சோளம் அறுவடை செய்த போது தோட்டத்தில் அடையாளம் தெரியாத எலும்புக்கூடு காணப்பட்டது. இதை கண்ட விவசாயி திருவேங்கடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற திருவேங்கடம் உதவி ஆய்வாளர் சஞ்சய் காந்தி தலைமையில் எலும்புக்கூடை மீட்டு கொலையா தற்கொலையா என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.