இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்து நிதி ஆயோக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது...
இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்து நிதி ஆயோக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது...;
இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்து நிதி ஆயோக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது... மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் நாட்டில் 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 2018 ஜனவரியில் முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்திலிருந்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ஒவ்வொரு மாதமும் ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்’ என்ற ‘டாஸ்போர்டில்’ பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியீடு செய்கிறது. அந்த வகையில் இந்த பட்டியலில் உள்ள விருதுநகர் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்காக லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் (ADP) கீழ் தகுதியான ₹3 கோடி விருதையும் பெற்றுள்ளது. தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டை நேரடியாக சமாளிப்பது வரை, விருதுநகர் பொது சுகாதாரத்துறை "விரு கேர்" (viru care) என்ற மாவட்ட தாய் சேய் கண்காணிப்பு மையம் பிரத்யேகமாக துவங்கப்பட்டு கர்ப்பிணி முதல் குழந்தை பிறந்து குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் நிறம்பும் வரை தொடர்ந்து அவர்களது உடல் நலத்தில் அக்கறையுடன் செவிலியர்கள் மருத்துவர்கள் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை வழங்குவர். ஏதேனும் குறைபாடுகள், உடல் நல தொந்தரவு இருந்தால் உடனடியாக அவர்களை அணுகி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது என சிறப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.